ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல இயக்குநரின் மகன் !

Webdunia
ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (11:58 IST)
கிராமத்து வாசனைகளையும், எதார்த்த மக்களின் வாழ்வையும் சினிமாவின் மூலம் வெளிக்கொணர்ந்த இயக்குநர் தங்கர் பச்சான். இவரது இயக்கத்தில் வெளியான பள்ளிக்கூடம், களவாடியபொழுதுகள், சொல்ல மறந்த கதை போன்ற படங்கள் எல்லோராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் தங்கர் பச்சான் தற்போது சென்னை நகரத்தில் நிகழும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ’டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.இதில், அவரது மகன் விஜித் பச்சானை ஹிரோவாக அறிமுகப்படுத்துகிறார்.
 
மேலும், இப்படத்தில் கதாநாயகிகளாக மிலனா நாகராஜ், அஸ்வினி ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர். பல முக்கிய நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். பிஎஸ்என் எண்டெர்டெரின் மெயிண்ட் பிரைவெட் லிமிடேட் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்