எஸ்கே 16' படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்கள்

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (20:08 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள 'எஸ்கே 16' படத்தின் அப்டேட்டுக்கள் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது. ஒரு படத்தின் அப்டேட்டுக்கள் எப்படி வரவேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பது போன்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, சூரி, நட்டி நட்ராஜ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் இணைந்துள்ள நிலையில் தற்போது இயக்குனர்கள் பாரதிராஜா, சமுத்திரக்கனி  ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். 
 
மேலும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, எடிட்டராக அந்தோணி மற்றும் கலை இயக்குனராக வீரசமர் ஆகியோர்கள் சற்றுமுன் இணைந்துள்ளனர். இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் என்பது ஏறகன்வே தெரிந்ததே

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்