சிவகார்த்திகேயனின் புதிய பட காட்சி லீக்…

வெள்ளி, 8 டிசம்பர் 2023 (15:45 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மாவீரன். இப்படத்தை அடுத்து, ராஜ்குமார் பெரியசாமி படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுன் இணைந்து சாய்பல்லவி நடித்து வருகிறார். ஜிவி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

எஸ்கே21 என்ற இப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வரும் நிலையில், இப்படத்தின் காட்சிகள் இணையதளத்தில் கசிந்துள்ளது.

இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவத்தை மையமாக கொண்ட இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்