இந்த நிலையில், மிக்ஜாம் புயலில் மக்களுக்கு உதவுவதற்காகவும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக பகுதிவாரியாக அமைச்சர்களை நிமியத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில் மேலும் 7 அமைச்சர்களை முதல்வர் நியமித்துள்ளதுடன், நிவாரண பணிகளை துரிதப்படுத்த முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம்.