ஹீரோ ரிலீசில் சிக்கலா...? தயாரிப்பு நிறுவனம் பதில்!

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (16:24 IST)
நம்ம வீடு பிள்ளை வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'ஹீரோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
இவர்களுடன் பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜூன், இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகிற டிசம்பர் 20 ம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்ண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ரிலீசாக இருந்தது. ஆனால்,  சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
 
இந்நிலையில் தற்போது இந்த பிரச்னையின் அதிரடி திருப்பமாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், எங்கு திரும்பினாலும் தங்கள் படத்தை பற்றிய பேச்சுதான் அதற்கு உதவியாக இருந்தவர்களுக்கும்  நன்றி என்று கோபமாக பதிவிட்டதுடன், ஹீரோ படம் திட்டமிட்டபடி டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்