இயக்குனர் பாண்டிராஜ் செய்யப்போகும் 'மெரினா புரட்சி' இதுதான்

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (01:28 IST)
சிவகார்த்திகேயன் நடித்த 'மெரினா' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பாண்டியராஜ், அடுத்ததாக 'மெரினா புரட்சி' என்ற படத்தை தயாரிக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உலகையே திரும்பி பார்க்க வைத்த புரட்சிதான் இந்த 'மெரினா புரட்சி' ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய இந்த போராட்டம் மத்திய, மாநில அரசுகளை நடுங்க வைத்தது

இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு பின்னர் கோலிவுட் திரையுலகில் ஜல்லிக்கட்டு குறித்த படங்கள் அதிகம் வெளிவந்தது அவற்றில் மெர்சல், கருப்பன் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கது. வரும் பொங்கல் தினத்தில் சண்முகப்பாண்டியன் நடித்த 'மதுரவீரன்' திரைப்படமும் ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தகக்து

இந்த நிலையில் பாண்டிராஜ் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு 'மெரினா புரட்சி' என்ற டைட்டில் வைக்கப்பட்டு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் இன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் காளை ஒன்று கம்பீரமாக இருப்பதால் இந்த படமும் ஜல்லிக்கட்டை மையமாக கொண்ட கதையம்சம் கொண்டது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்