ஆனால் இதுவரை அது சம்மந்தமாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவரின் அடுத்தப் படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க, அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள வெங்கட்பிரபு “படத்தின் கதை சிறப்பாக வந்துள்ளது. கொஞ்சம் வித்தியாசமாகவே முயற்சி செய்துள்ளேன். இதுவரை சிவகார்த்திகேயன் ஏற்று நடிக்காதக் கதாபாத்திரம். கதையை சிவாவுக்கும், தயாரிப்பாளருக்கும் விவரித்து விட்டேன். இருவருக்குமே கதை ரொம்ப பிடித்துள்ளது. ” எனத் தெரிவித்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.