தனுஷின் ஆடியோ லான்ச் பேச்சைக் கேட்க தயாரா?... ‘இட்லி கடை’ அப்டேட்!

vinoth

சனி, 9 ஆகஸ்ட் 2025 (08:38 IST)
பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தேனி உள்ளிட்ட தனுஷின் சொந்த ஊர்ப் பகுதிகளில் தொடங்கி நடந்தது.  படத்தை டான் பிக்சர் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக கிரண் கௌஷிக் பணியாற்றுகிறார்.

படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு மொத்தமும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இதற்கிடையில் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘என்ன சுகம் என்ன சுகம்’ பாடல் ரிலீஸாகி ஒரு கோடி பார்வையாளர்களுக்கு மேல் ஈர்த்துள்ளது. இதையடுத்து படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

சமீபகாலமாக தனுஷ் தன்னுடைய இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளில் ரஜினி, விஜய் போல பேசி கவனத்தை ஈர்த்து வருகிறார். அவரின் தன்னிரக்க உரைகள் ஆதரவையும் கேலிகளையும் ஒருசேர பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்