மாவீரன் படத்துக்காக லோகேஷ் கொடுத்த ஐடியா… இயக்குனர் மடோன் அஸ்வின் பகிர்ந்த தகவல்!

வியாழன், 22 ஜூன் 2023 (12:11 IST)
சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்துள்ள மாவீரன் திரைப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்துள்ள நிலையில் இப்போது ரிலீஸ் வேலைகள் நடக்கின்றன. படம் ஜுலை 14 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுவரை படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஜூலை 2 ஆம் தேதி இந்த படத்தின் ஆடியோ வெளியீடு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்துக்காக கொடுத்த யோசனைகளைப் பற்றி பேசியுள்ளார்.

அதில் “10 ஆண்டுகளாக நானும் லோகேஷும் நண்பர்கள். அவர் குறும்படங்கள் காலத்தில் இருந்து பார்த்து வருகிறேன். அவரின் வளர்ச்சி எங்களுக்கெல்லாம் ஊக்கம் அளிக்கிறது. மாவீரன் படத்துக்காக அவர் நிறைய யோசனைகள் கூறியுள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்