விஷாலை தோற்கடித்த சிவகார்த்திகேயன்

Webdunia
சனி, 6 ஜனவரி 2018 (13:02 IST)
மலேசியாவில் நடைபெற்று வரும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் விஷால் அணியை எதிர்த்து போட்டியிட்ட சிவகார்த்திகேயன் அணி வெற்றி பெற்றுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் 19 கிரவுண்ட் நிலத்தில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக நடிகர் ரஜினி, கமல், விஜய், விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் மலேசியா சென்றுள்ளனர்.

கலைநிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது.  நட்சத்திர கிரிக்கெட் விழாவின் முதல் போட்டியில் சிவகார்த்திகேயனின் திருச்சி டைகர்ஸ் அணி, விஷாலின் மதுரை காளைஸ் அணியை தோற்கடித்து வெற்றி கோப்பையை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்