சம்பள பாக்கி கேட்டு சிவகார்த்திகேயன் வழக்கு! – தயாரிப்பாளர் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (08:32 IST)
படம் நடித்ததற்கு சம்பளம் பாக்கி தராமல் இழுத்தடிப்பதாக தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்துள்ள டான், அயலான் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். இந்த படத்திற்கான சம்பள பாக்கியை தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு தராமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை தர சொல்லி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என சிவகார்த்திகேயன் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை மார்ச் 31ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்