சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு ஆண் குழந்தை. மகிழ்ச்சியுடன் வெளியிட்ட அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 3 ஜூன் 2024 (17:49 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன் நிறை மாத கர்ப்பிணியாக இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியான நிலையில் நேற்று இரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் சமீபத்தில் ஆர்த்தி கர்ப்பமானார். இந்த தகவல் யாருக்கும் தெரியாத நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோவின் மூலம் ஆர்த்தி கர்ப்பம் ஆகி உள்ளார் என்பது தெரிய வந்தது. 
 
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
எங்களுக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம், ஆராதனாவிற்கும் குகனுக்கும் நீங்கள் தந்த அன்பையும் ஆசியையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தரவேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்