மீண்டும் தள்ளிபோன சிறுத்தை சிவா? - சூர்யா திரைப்படம்…. தொடங்குவது எப்போது?

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (16:02 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படம் மீண்டும் தாமதமாக தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிறுத்தை ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றவுடன் சூர்யாவோடு ஒரு படத்தில் இணைய ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் சிறுத்தை சிவாவுக்கு அப்போது அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படம் தள்ளிப்போனது. அதன் பின்னர் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் இணைய வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தை முடிந்துள்ள நிலையில் சிறுத்தை சிவா சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இந்த படம் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் தொடங்கப்படவில்லை. இதனால் சூர்யா இப்போது பாலாவின் புதிய படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அடுத்து வாடிவாசல் படமும் தொடங்க உள்ள நிலையில் சிறுத்தை சிவா இயக்கும் படம் இந்த ஆண்டு இறுதிக்கு தள்ளிவைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்