நயன்தாராவுக்கு நிகரான சம்பளம்… விக்னேஷ் சிவன் கொடுத்த ஷாக்!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (15:56 IST)
அஜித் 62 படத்துக்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபகாலங்களாக அஜித் ஒரு படடத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடையே அதிக இடைவெளியை எடுத்துக்கொள்கிறார். அதுபோலவே ஒரு படம் முடிந்த பின்னரே அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் வெளியாகுமாறு பார்த்துக் கொள்கிறார். ஆனால் இப்போது அவரின் அஜித் 61 படம் தொடங்குவதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.

நேற்று வெளியான அப்டேட்டின்படி ‘அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கான வாய்ப்பை நயன்தாராதான் விக்னேஷ் சிவனுக்கு பெற்றுத் தந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இப்போது அஜித் 62 படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அவருக்கு சம்பளமாக 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்காக விக்னேஷ் சிவன் தனக்கும் 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித் 62 படம் லைகா நிறுவனத்துக்குக் கிடைக்க விக்னேஷ் சிவனும் ஒரு காரணமாக இருந்ததால் இந்த சம்பளத்தைக் கொடுக்க லைகா நிறுவனம் தயங்காது என்றும் சொல்லப்படுகிறது.

Source valaipechu

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்