இதுவரை தமிழ் சினிமாவில் அவர் இயக்கியதெல்லாம் கார்த்தி, அஜித், ரஜினி மற்றும் சூர்யா போன்ற உச்ச நடிகர்களைதான். கடைசியாக அவர் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான கங்குவா திரைப்படம் மோசமான எதிர்ம்றை விமர்சனங்களைப் பெற்று அவரை கேலிக்குரியவராக்கியது.
இதனால் சிறுத்தை சிவா அடுத்த படத்தை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. அவர் பெரிதும் நம்பிய அஜித்தே இப்போது இணைந்து படம் பண்ண வேண்டாம் என சொல்லிவிட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமானப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகவும் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.