சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'எதிர்நீச்சல் 2' தொடர், டிஆர்பி பட்டியலில் நான்காம் இடத்திற்கு சரிந்து, அதற்கு பதிலாக விஜய் தொலைக்காட்சியின் 'சிறகடிக்க ஆசை' தொடர் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த வாரம் 'சிறகடிக்க ஆசை' ஏழாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் 10 இடங்களில் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியின் தொடர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டி.ஆர்.பி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை சன் தொலைக்காட்சியின் தொடர்கள் பெற்றுள்ளன. 'சிங்கப் பெண்ணே' தொடர் 9.29 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஸ்வாதி கொண்டி மற்றும் நியாஸ் கான் நடிக்கும் 'மூன்று முடிச்சு' தொடர் 9.16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.