'எதிர்நீச்சல் 2' தொடரிலிருந்து நடிகை கனிகா விலகியது ஏன்? வெளியான உண்மை காரணம்!

Siva

திங்கள், 18 ஆகஸ்ட் 2025 (17:22 IST)
பிரபல தொலைக்காட்சி தொடரான 'எதிர்நீச்சல் 2'-ல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை கனிகா, அந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். தற்போது அவர் தொடரில் மருத்துவமனையில் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தொடரில் தொடர்ந்து நடிக்குமாறு அவரிடம் பேசிய போதும், தனது முடிவில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 
 
கனிகாவிற்கு நெருக்கமான வட்டாரங்களிடம் பேசியபோது, இந்த விலகலுக்கான காரணம் தெரியவந்துள்ளது. "ஒரு தொடரில் நடித்தால், தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லித்தான் அவர் 'எதிர்நீச்சல்' தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த தொடரும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல வரவேற்பையும், சிறந்த ரேட்டிங்கையும் பெற்றது. அதனாலேயே, அந்த தொடரின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க அவர் சம்மதித்தார்.
 
ஆனால் ‘எதிர்நீச்சல் 2’ சீரியலில் கனிகாவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததால்தான் அவர் விலகிவிட்டதாக சில செய்திகள் வெளியாகின. ஆனால், அதில் உண்மை இல்லை. அவர் அமெரிக்காவில் சென்று குடியேறலாம் என்று முடிவு செய்துள்ளார். அதனால்தான் இந்த முடிவை எடுத்தார். மற்றபடி வெளியில் கூறப்படும் எந்த காரணத்திலும் உண்மை இல்லை," என்று அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்