பாடகி சுசித்ரா விவாகரத்து: நள்ளிரவு தனுஷ் பார்ட்டியின் விளைவா?

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (14:52 IST)
இரண்டு நாட்களாக தனுஷ் மீது பரபரப்பு புகார் தெரிவித்து வந்த பாடகி சுசித்ரா தனது கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்வதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


 
 
நள்ளிரவு பார்ட்டியில் தனுஷ், சிம்பு, பாடகி சுசித்ரா ஆகியோர் கலந்து கொண்டு, அந்த பார்ட்டியில் தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கியதாக சுசித்ரா டிவிட்டரில் புகார் தெரிவித்தார்.
 
இந்நிலையில், தனது கணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். கார்த்திக் அலைபாயுதே படத்தில் அறிமுகமானார். மேலும், யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுக்கு நண்பராய் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சமிபத்தில் கார்த்திக் நான் திரைத்துறையில் தோற்றுவிட்டேன், எனவே சினிமாவில் இருந்து விலகுகிறேன் என அறிவித்திருந்தார்.
 
இதனிடையே சுசித்ராவின் இந்த விவாகரத்து முடிவுக்கு என்ன காரணம் என தெரியவில்லை.
அடுத்த கட்டுரையில்