ஆண்மைக்கு ஆப்பு வைக்கும் சீனாவின் புருசெல்லா பாக்டீரியா !!

சனி, 19 செப்டம்பர் 2020 (08:13 IST)
சீனாவில் புருசெல்லா எனும் பாக்டீரியா பரவால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது ஆண்மையை பாதிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
சீனாவில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகையை அஞ்ச வைத்துள்ளது. அதனால் உலகப் பொருளாதாரமே மந்தமாகியுள்ள நிலையில் இப்போது சீனாவில் புருசெல்லா எனும் பாக்டீரியாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
சீனாவில் உள்ள சோங்மு லாங்ஜோ உயிரியல் மருந்து நிறுவனத்தில் சென்ற ஆண்டு மத்தியில் இந்த பாக்டீரியா கசிந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது வரை 3,245 பேருக்கு புருசெல்லா பாக்டீரியா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
 
இந்த பாக்டீரியா மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது எனவும், பாக்டீரியா உள்ள உணவுப் பொருட்களை உண்பதால் பரவும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும், இந்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளானவர்கள் தலைவலி, தசை வலி, காய்ச்சல், சோர்வு மற்றும் நாள்பட்ட மூட்டுவலி ஆகிய பிரச்சனைகள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
 
இதில் சிலருக்கு வாழ்க்கை முழுக்க அதன் பாதிப்பு தொடரக்கூடும். அதாவது மூட்டு வீக்கம் அல்லது உடல் உறுப்பு வீக்கம் போன்ற ஏற்படக்கூடும். அதோடு இது ஆண்களின் ஆண்மையையும் பாதிக்க கூடும் என புதுத்தகவல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்