ராமேஸ்வரத்தில் கௌதம் கார்த்திக்… வெளியானது பத்து தல ஷூட்டிங் அப்டேட்

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (09:57 IST)
பத்து தல படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் விரைவில் தொடங்க உள்ளது.

நீண்ட காலமாக தனது திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார் சிம்பு. அவரது ஈஸ்வரன் திரைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அடுத்த படமான மாநாடு படத்தை நடித்து முடித்துக் கொடுத்து விட்டு இப்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தனது அடுத்தப்படமான பத்து தல படத்தில் எப்போது நடிப்பார் என்பது கேள்விக்குறியாகி இருந்தது. சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார். முதன்முறையாக கௌதம் கார்த்திக், சிம்பு இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்துக்கு மேலும் வலுவூட்டும் வகையில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் கௌதம் கார்த்திக்கை வைத்து இயக்க உள்ளாராம். அது முடிந்த பின்னர் சிம்பு வந்து படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்