நாளை சிம்புவின் அடுத்த பட அறிவிப்பா? இயக்குனர் யார்?

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (14:59 IST)
நாளை சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் கசிந்து உள்ளதை அடுத்த சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 
 
சிம்பு நடித்த பத்து தல என்ற திரைப்படம் வரும் முப்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளன. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருப்பதாகவும் இதில்  சிம்பு மற்றும் சூர்யா கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் குறித்த தகவல் கடந்து சில நாட்கள் கசிந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் இந்த படத்தின் பூஜையும் நாளை சென்னையில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்