வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் சிம்பு - லாக்டவுன் முடிஞ்சதும் புது மன்மதனை பார்ப்பீங்க!

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (08:02 IST)
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு     நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு மேலும் நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் நடிகர் சிம்பு வீட்டை சுற்றி ஓடி ஓடி வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்கிறார். சிம்புவை பழைய மன்மதனை போன்று பார்க்கவேண்டும் என அவரது ரசிகர்கள் அனைவரையும் கோரிக்கை வைத்து உடல் எடையை குறைக்க வலியுறுத்தி வந்தனர். இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் இதனை ஏற்றுள்ள  சிம்பு குறிப்பிட்ட நாட்களில் ஸ்லிம் ஃபிட் ஆக கடுமையாக முயற்சித்து வருகிறார். எனவே அவர் தற்போது நடித்து வரும் மாநாடு படத்தில் மன்மதன் போன்ற சிம்புவை மீண்டும் காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்