சிம்பு இருந்தும், ‘அது’ இல்லையாம்…

Webdunia
சனி, 20 மே 2017 (11:07 IST)
சிம்பு நடித்துள்ள படத்தின் கதை என்னவென்று, இயக்குநரின் அப்பா முன்கூட்டியே கேட்டுத் தெரிந்து கொண்டாராம்.

 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் நடித்த படம் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா’. படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்திருந்ததால், பெண்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இளைஞர்களுக்கு படம் பிடித்துப் போனதால், இரண்டு, மூன்று முறை பார்த்து கலெக்‌ஷன் குறையாதவாறு பார்த்துக்  கொண்டனர்
 
என்னதான் நல்ல கலெக்‌ஷன் என்றாலும், பேர் கெட்டுப்போனால் என்னாவது? அதனால், ஆதிக் அடுத்து இயக்கியுள்ள  ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை, ஷூட்டிங் போவதற்கு முன்பே கேட்டுத் தெரிந்து கொண்டாராம் ஆதிக்கின்  தந்தை. போன படத்தைப் போல இந்தப் படத்திலும் ‘ஏ’டாகூட சமாச்சாரங்கள் இருந்தால், ‘அந்த’ மாதிரி இயக்குநர் என தன்  மகனை முத்திரை குத்திவிடுவார்கள் என்ற பயம்தான் காரணம். சிம்பு இருந்தும், ‘அது’ இல்லீன்னா எப்படிங்க..?
 
அடுத்த கட்டுரையில்