சென்னையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு!

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (21:41 IST)
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடந்தது என்பதும் குறிப்பாக மும்பையில் ஒரு மாதத்திற்கு மேல் நடந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இதற்கான செட் அமைக்கும் பணி தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கி டிசம்பர் இறுதிக்குள் முடிந்துவிடும் என்றும் இந்த படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்