சிம்புவின் ‘மாநாடு’ ரன்னிங் டைம் குறித்த தகவல்!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (13:26 IST)
சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. 
 
இந்த படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மாநாடு படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் சற்றுமுன் தெரிய வந்துள்ளது. இந்த படம் 2 மணி நேரம் 27 நிமிடங்கள் ஓடும் என்றும் அதாவது 147 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கும் இந்த படத்தில் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ், டேனியல், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்