ஒரு வழியாக ஓடிடிக்கு வந்த ஈஸ்வரன்… சிம்பு ரசிகர்கள் குஷி!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (12:26 IST)
சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர் படத்தோடு வெளியானது ஈஸ்வரன் திரைப்படம். சிம்பு நடிப்பில் மிகக் குறைந்த நாட்களில் உருவான படம் என்ற பெயரோடு வெளியானது. வெளியீட்டுக்கு முன்னர் ஓரளவு எதிர்பார்ப்பு இருந்தது. அப்போதே படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கு நல்ல விலை வந்தது. ஆனால் படக்குழு அதிக விலை சொன்னதால் பிஸ்னஸ் நடக்கவில்லை.

ஆனால் படம் வெளியாகி பிளாப் ஆனதால் அதன் பின்னர் யாருமே கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமை இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை முதல் அந்த தளத்தில் ஈஸ்வரன் படம் ஸ்ட்ரீம் ஆகும் என சொல்லப்படுகிறது.

 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்