சுஷாந்த் பயோபிக் படத்துக்கு தடை இல்லை… நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (12:05 IST)
தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த ஆண்டு தனது மும்பை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் வாழ்க்கையை தழுவி பாலிவுட்டில் படம் இயக்கப்பட்டுள்ளது. திலீப் குலாட்டி இயக்கியுள்ள இந்த படத்தில் சுஷாந்த் சிங் கதாப்பாத்திரத்தில் ஜூபர் கான் நடித்துள்ளார். ”நய்யே; தி ஜஸ்டிஸ்” என்னும் இந்த படம் ஜூன் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தை வெளியிட கூடாது என சுஷாந்த் சிங்கின் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரின் மனுவை ஏற்று விசாரித்த நீதிபதிகள் ‘மனுதாரர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுக்களில் தெளிவான ஆதாரங்கள் இல்லை. மேலும் எவ்வாறு உரிமை மீறப்பட்டுள்ளது என்பது தெளிவாகவில்லை. இதனால் படத்துக்கு தடைவிதிக்க முடியாது’ எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்