அய்யய்யோ அது நிஜப்பாம்பு இல்லை… பிளாஸ்டிக் பாம்பு – சுசீந்தரன் அறிவிப்பு!

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (11:47 IST)
நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஈஸ்வரன் வேகமாக வளர்ந்து வருகிறது.

சிம்பு, நிதி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் உயிருள்ள பாம்பை மரத்திலிருந்து பிடித்து சாக்குப் பையில் போடுவது போன்ற ஒரு காட்சி உள்ளதால் தற்போது சிக்கல் உருவாகியுள்ளது. வன உயிரினப் பாதுக்காப்புச் சட்டத்தின் கீழ் பாதுக்காக்க வேண்டிய உயிரினங்களில் இந்தியாவில் உள்ள அனைத்துப் பாம்புகளும் உள்ளது. சிம்பு பிடித்துள்ள பாம்பு வன உயிரினப் பாம்பு சட்டத்தின் பட்டியல் 2ல் இடம்பெற்றுள்ளதால் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972ந் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினமான பாம்பை இப்படி செய்வது குற்றம். சிம்பு மீது வன உயிரின ஆர்வலர்கள்  புகாரளிக்கவுள்ளனர்.

ஆனால் அது நிஜப் பாம்பு இல்லை என்றும் பிளாஸ்டிக் பாம்பை வைத்து எடுத்து அதை கிராபிக்ஸ் செய்தோம் என்றும் அந்த படத்தின் இயக்குனர் சுசீந்தரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்