சிம்புவுக்கு துண்டுப்போட்ட மஞ்சப்பை இயக்குனர்!

செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (10:31 IST)
இயக்குனர் ராகவன் இப்போது மஞ்சப்பை இரண்டாம் பாகம் எடுப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

மஞ்சப்பை என்பது கிராமத்திலிருந்து நகரத்துக்கு வருகிறவர்களை கிண்டலாக குறிப்பிடும் வார்த்தை. அதையே தன் படத்துக்கு தலைப்பாக வைத்து கிராமத்தில் இருந்து ஊருக்கு வரும் ஒரு முதியவரின் போராட்டங்களை சொன்னப் படம் மஞ்சப்பை. அந்த முதியவராக ராஜ்கிரண் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை இப்போது உருவாக்க உள்ளார் இயக்குனர் ராகவன்.

இந்நிலையில் அவர் நடிகர் சிம்புவுக்கு கதை ஒன்றை சொல்லி சம்மதம் வாங்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது சிம்புவின் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்