படத்துல நடிப்பார்னு பாத்தா…? விளம்பரம் ஒன்றில் நடித்த சிம்பு..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (13:45 IST)
சிம்பு பத்து தல படத்தை முடித்துவிட்டு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்துக்காக தயாராகி வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது சிம்பு ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். அபிபஸ் என்ற பஸ் முன்பதிவு செயலிக்கான விளம்பரத்தில் சமீபத்தில் நடித்து முடித்துள்ளாராம். ஏற்கனவே சிம்பு வாசனை திரவியம் உள்ளிட்ட சில பொருட்களின் விளம்பரங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்