‘மாநாடு’ தவிர வேறு எந்த படமும் இல்லை: சிம்பு தரப்பினர் விளக்கம்

Webdunia
ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (08:13 IST)
சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள மாநாடு திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் அவர் ஹன்சிகாவுடன் அடுத்த மஹா என்ற திரைப்படமும் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த இரண்டு படங்களும் வெளிவந்தால் சிம்புவின் மார்க்கெட் தமிழ் திரை உலகில் எங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்நிலையில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்படும் படங்களின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட ஒரு டஜனுக்கும் மேல் வந்துவிட்டது. கேஎஸ் ரவிக்குமார் முதல் மனோஜ் பாரதிராஜா அவர் பல இயக்குனர்களின் படங்களில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக ’சிகப்பு ரோஜாக்கள் 2’ படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் அதில் கமல் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் ஒரு காமெடியான வதந்தி வெளிவந்தது 
 
இந்த நிலையில் தற்போது சிம்பு தரப்பினர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர். தற்போதைக்கு மாநாடு படத்தில் மட்டுமே சிம்பு நடித்து வருவதாகவும் வேறு எந்த படத்திலும் அவர் இதுவரை நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்றும் கதையும் கேட்கவில்லை என்றும் கூறியுள்ளனர். எனவே சிம்புவின் படங்கள் குறித்து கற்பனையாக கதைகள் எதையும் பரப்ப வேண்டாம் என்றும் அவரது அடுத்த படம் கமிட் ஆனதும், சிம்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தற்போது சிம்பு ’மாநாடு’ படத்தில் மட்டும் முழு கவனத்தை செலுத்தி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்