‘பூவரசம் பீப்பீ’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், இயக்குநர் ஹலிதா ஷமீம். இப்போது ‘சில்லுகருப்பட்டி’ என்ற அந்தாலஜி ஸ்டைல் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சமுத்திரகனி மற்றும் சுனைனா நடிகின்றனர். இவர்களுடன் சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் சிறப்பம்சமாக மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் என திறமை மிக்க நான்கு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றிருக்கிறார்கள். குமார் இசை அமைத்துள்ள இப்படம் நான்கு விதமான காதல் கதைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் யூடியூப்பில்வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் 9 வது இடத்தை பிடித்துள்ளது. இப்படத்திம் 96 போன்று அனைத்து காதலர்களுக்கும் சிறப்பான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற டிசம்பர் 27-ம் தேதி படம் ரிலீசாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.