ஆடியோ இல்லாமல் வெளியான சில்லு கருப்பட்டி டீசர்: விஜய் சேதுபதி பாராட்டு

புதன், 26 டிசம்பர் 2018 (11:21 IST)
‘பூவரசம் பீப்பீ’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், இயக்குநர் ஹலிதா ஷமீம். இப்போது ‘சில்லுகருப்பட்டி’ என்ற அந்தாலஜி ஸ்டைல் படத்தை இயக்கி உள்ளார்.



இதில் சமுத்திரகனி, சுனைனா, சாரா, லீமா சென், மணிகண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். 
 
இந்த படத்துக்கு பிரதீப் குமார் இசை அமைத்துள்ளார்.  மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜம், யாமி யங்னமூர்த்தி, விஜய் கார்த்திக் என நான்கு ஒளிப்பதிவாளர்கள் இந்த படத்தில் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது ‌.
 
ஆடியோ இல்லாமல் வெளியாகி உள்ள இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
 
இந்த டீசரை விஜய் சேதுபதி வெகுவாக பாராட்டி உள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்