சிம்பு 50 படத்தில் இணைந்த பிரபல தயாரிப்பு நிறுவனம்..!

vinoth

ஞாயிறு, 13 ஏப்ரல் 2025 (09:26 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் தேசிங் பெரியசாமி. அதன் பிறகு அவர் ரஜினிக்காக பிரம்மாண்ட கதை ஒன்றை எழுதினார். ஆனால் திடீரென்று அதிலிருந்து ரஜினி விலகினார். அதன் பின்னர் சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படத்தில் இருந்து விலகியது. அதன் பின்னர் சிம்புவும் தேசிங்கும் புதிய தயாரிப்பாளரைத் தேடி வந்தனர். இந்நிலையில் இப்போது அந்த பெரிய பட்ஜெட் படத்தை சிம்புவே தன்னுடைய ‘ஆத்மன் சினி ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இது சிம்புவின் ஐம்பதாவது படமாக உருவாக உள்ளது.

இந்த படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் அதற்காக சிம்பு ஒரு முதலீட்டாளரைத் தேடி வந்தார். இந்நிலையில் இப்போது சிம்புவின் 51 ஆவது படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனமே அந்த படத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்