ஆங்கில வெப் சீரீஸில் நடிக்கும் சித்தார்த்…!

vinoth

செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (08:13 IST)
மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த சித்தார்த்தை இயக்குனர் ஷங்கர் பாய்ஸ் படம் மூலமாக நடிகராக்கினார். பாய்ஸின் தெலுங்கு வெர்ஷன் சூப்பர் ஹிட்டானதால் அங்கு அவர் முன்னணிக் கதாநாயகன் ஆனார். தொடர்ச்சியாக அங்கு படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் இந்தி, தமிழ் என பல மொழிகளில் நடித்து வந்தார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தோல்விப் படங்களாகக் கொடுத்து வந்த சித்தார்த் ‘சித்தா’ என்ற திரைப்படத்தின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பினார்.  பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறலை புதிய பரிமாணத்தில் சித்தா படம் காட்டியிருந்ததால் பெரிய அளவில் கவனம் பெற்றது. அதையடுத்து சமீபத்தில் அவர் நடித்த 3BHK படம் ரிலீசாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் சித்தார்த் தற்போது ஒரு ஆங்கில வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அமெரிக்க எழுத்தாளர் ஜூம்பா லஹரியின் சிறுகதைகளை மையமாகக் கொண்டு 8 எபிசோட்கள் கொண்ட வெப் சீரிஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடிக்க சித்தார்த் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த சீரிஸின் சில எபிசோட்களை லன்ச் பாக்ஸ் படத்தின் இயக்குனர் ரிதேஷ் பத்ரா இயக்கவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்