சர்வதேச ஓ.டி.டி. தளமான நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் சமீபத்தில் ஹைதராபாத்தில், தெலுங்கு திரையுலகப் பிரபலங்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில், பிரபல நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லி, தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் உட்பட திரையுலகை சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ஆனால், இந்த சந்திப்புக்குத் தமிழ் திரையுலகில் இருந்து கார்த்திக் சுப்பராஜ் மற்றும் 'நித்தம் ஒரு வானம்' படத்தின் இயக்குநர் கார்த்திக் ஆகிய இருவரும் மட்டுமே அழைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் திரையுலகில் பல பெரிய தயாரிப்பு நிறுவனங்களும், முன்னணி இயக்குநர்களும் இருக்கும் நிலையில், இச்சந்திப்புக்கு அவர்களை அழைக்காதது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவில், ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைப்பதால், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தெலுங்கு திரையுலகத்துடன் தனது உறவை வலுப்படுத்த விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த செயல், தமிழ் திரையுலக பிரபலங்களுக்கு கிடைத்த புறக்கணிப்பாகவே பார்க்கப்படுகிறது.