அல்லு அர்ஜுனுடன் பிரச்சனையா?... புஷ்பா 2 பற்றி சர்ச்சை கருத்துக்கு விளக்கம் அளித்த சித்தார்த்!

vinoth
வெள்ளி, 13 டிசம்பர் 2024 (08:34 IST)
கடந்த சில ஆண்டுகளாக தோல்விப் படங்களாகக் கொடுத்து வந்த சித்தார்த் ‘சித்தா’ என்ற திரைப்படத்தின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பினார்.  பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறலை புதிய பரிமாணத்தில் சித்தா படம் காட்டியிருந்ததால் பெரிய அளவில் கவனம் பெற்றது.

இதையடுத்து 7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிஸ் யூ’  N.ராஜசேகர் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் இந்தவாரம் ரிலீஸாகிறது.

முன்னதாக படம் சம்மந்தமாக நேர்காணல் அளிக்கும் போது புஷ்பா 2 டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு கூடிய கூட்டம் பற்றி சர்ச்சைக் கருத்தை சித்தார்த் தெரிவித்திருந்தார். அதுபற்றி இப்போது விளக்கமளித்துள்ள அவர் “அல்லு அர்ஜுனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். முதல் பாகம் வெற்றியடைந்த இடத்தில் அங்கு பெரிய வரவேற்புக் கிடைத்துள்ளது.  சினிமா ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எல்லோரும் ஒரே கப்பலில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்