காதல், கல்யாணம் என்றால் மூடி வைக்கிற பழக்கம் சிலருக்குதான். ஸ்ருதியை அந்த லிஸ்டில் சேர்க்க முடியாது. பிக் சினிமாஸின் மூக்கை அவர் உடைத்திருப்பதே அதற்கு சான்று.
29 வயதாகும் ஸ்ருதி அடுத்த ஆண்டு வெளிநாட்டு வாழ் தொழிலதிபரை மணக்கவிருக்கிறார் என்று பிக் சினிமாஸ் தனது ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தது. இதனைப் பார்த்த ஸ்ருதி, வரிசையாக ஸ்மைலி சிம்பலைப் போட்டு, ஓகே, அப்புறம் என்று பிக் சினிமாஸை கிண்டல் செய்துள்ளார்.
சினிமாவில் பிஸியாக நடித்துவரும் ஸ்ருதி இப்போது யாரையும் காதலிக்கவில்லை என்பது ஊருக்கே தெரிந்த விஷயம். பிறகு ஏன் பிக் சினிமாஸ் இப்படியொரு செய்தியை வெளியிட்டது?
ஸ்ருதி அதனை காமெடியாக எடுத்ததால் பிரச்சனை முளையிலேயே கிள்ளப்பட்டுவிட்டது.