காஜல்... காசேதான் கடவுளடா...

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2016 (16:31 IST)
சீனியர் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறி வந்த காஜல் அகர்வால், ராம் சரண் தேஜாவுடன் நடித்துக் கொண்டே அவரது அப்பா சிரஞ்சீவியுடனும் நடிக்க உள்ளார். இந்த காலமாற்றத்துக்குப் பின்னால் விளையாடியது காசு என்கிறார்கள் ஆந்திராவில்.


 


சிரஞ்சீவியின் 150 -வது படமாக கத்தியை ரீமேக் செய்கின்றனர். இதில் காஜல் அகர்வால் ஹீரோயின். தெலுங்குப் படங்களில் ஒரு கோடி வாங்கிக் கொண்டிருந்த அவருக்கு இரண்டு கோடிகள் சம்பளம் பேசியிருக்கிறார்கள். ஒரு கோடி அதிகமாக கிடைப்பதால் சிரஞ்சீவியுடன் நடிக்க தயக்கமில்லாமல் ஒப்புக் கொண்டார் காஜல் அகர்வால்.

இந்த சம்பள விவகாரம் ஆந்திராவில் வெளியாகி சூடான விவாதத்தை கிளப்பியிருக்கிறது.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்