எலும்பும் தோலுமாக ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கும் ஸ்ருதி ஹாசன்!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (17:04 IST)
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
 
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.
சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழுந்து ஒருவரை பிரேக்கப் செய்தார். தற்போது மீண்டும் ராப் பாடகர் சந்தானு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் தான் 17 வயதாக இருக்கும்போது மாடலிங் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில்  வெளியிட்டு பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்