ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

வெள்ளி, 17 நவம்பர் 2023 (15:05 IST)
தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார்.

அதைத்தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். ஏற்கனவே சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சலார் படத்தில் தன்னுடைய காட்சிகளை நிறைவு செய்ததாக அறிவித்தார்.

இப்போது கருப்பு நிற சேலையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ✨Prakruthi Ananth

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்