ஊரை ஒன்று கூட்டி சிக்கலில் சிக்கிய அல்லு அர்ஜூன்!!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (17:42 IST)
நடிகர் வந்ததால் அல்லு அர்ஜூன் மற்றும் புஷ்பா படக்குழுவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 
 
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ஒரு வருட இடைவெளிக்கு பிறகு அல வைக்குந்தபுரம் என்ற படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். இதன் பின்னர் தற்போது புஷ்பா என்ர படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்த படத்தின் படபிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது தெலங்கானாவில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டாலும் சுற்றுலாதளங்களை திறப்பதற்கான தடை தொடர்கிறது. 
இந்நிலையில் அல்லு அர்ஜுன் தெலங்கானா அதிலாபாத் அருகில் உள்ள வனப்பகுதியில் படபிடிப்பில் பங்கேற்றிருந்த போது மாநில் அரசின் தடையை மீறி நண்பர்களுக்கு படப்பிடிப்பு தளத்திற்கு அருகில் உள்ள குண்டலா அருவிக்கு சென்றதாக தெரிகிறது. 
 
அப்போது அல்லு அர்ஜூனை காண அவரது ரசிகர்கள் முந்தி அடித்துக்கொண்டதால் தனிநபர் இடைவெளி கேள்விக்குறியானது. எனவே, தடையை மீறியதாக புகார் வந்ததால் அல்லு அர்ஜூன் மற்றும் புஷ்பா படக்குழுவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்