சூப்பர் ஸ்டாரின் உறவினரை வம்பிழுக்கும் சர்ச்சை இயக்குநர் ?

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (17:06 IST)
இந்திய சினிமாவில் சர்ச்சைக்குப் பெயர் போனவர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துகள் சர்ச்சைய்யாவது வாடிக்கையாகிவிட்டது.

சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான பவர் ஸ்டார் என்ற படத்தை ஓடிடியில் வெளியிட்டார் ராம்கோபால் வர்மா.

இதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் படாக்கி இருந்ததாககூறி அவரது ரசிகர்கள் ராம் கோபாலின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.

இப்பிரச்சனை முடிவதற்குள் சிரஞ்சீவியின் மைத்துனரும்  நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் பற்றி  ராம் கோபால் வர்மா படமாக்கவுள்ளதாகவும் அதற்கு அல்லு என தலைப்பும் வைத்துள்ளார்.

இந்தக் கதையில் உள்ள காதாப்பாத்திரங்களும் திரைக்கதையும்  முழுவதும் சிரஞ்சீவியின் உறவினர்களைக் குறிவைத்தே எழுதப்பட்டுள்ளதாகவும்  தகவல் வெளியாகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்