பவுலிங்கிலும் திருப்புமுனை ஏற்படுத்திய ஷர்துல் தாக்கூர்... இங்கிலாந்துக்கு முதல் விக்கெட்

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (16:12 IST)
இந்திய அணிக்கான முதல் திருப்புமுனை விக்கெட்டை எடுத்துள்ள ஷர்துல் தாக்கூர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 466 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இந்த டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிதானமாக ஆடி 100 ரன்கள் சேர்த்தனர். அப்போது தனது முதல் ஓவரை வீசவந்த தாக்கூர் ரோரி பர்ன்ஸை 50 ரன்களில் ஆட்டமிழக்க செய்து திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்