உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட 5 வகையான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இதனிடையே உண்மையான தடுப்பூசிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில் தடுப்பூசிகளின் மேல் உள்ள லேபிள் எந்த நிறத்தில் இருக்கும், அதில் நிறுவனங்களின் குறியீடுகள் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் குறித்து விளக்கப்பட்டு இருக்கிறது.