ரஜினியுடன் இணைந்து படம் பண்ண 11 ஆண்டுகள் காத்திருந்ததாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்துள்ளார். ஷங்கர் - ரஜினி காம்போவில் வெளியாகும் 3 வது படம் இது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது.
படத்தை பற்றியும் ரஜினுயுடன் பணியாற்றியது பற்றியும் ஷங்கர் பின்வருமாறு பேசினார். 2.0 படம் எந்திரன் படத்தின் தொடர்ச்சி அல்ல. இது வேறொரு கதைக் களம். ஆனால், நமக்கு பரிச்சயமான கேரக்டர்கள் இந்த படத்தில் இடம் பெரும்.
மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும் போது கூட, 12 கிலோ எடையுள்ள உடையை போட்டுக் கொண்டு நடித்துக் கொடுத்தார் ரஜினி.
சூப்பர் ஸ்டாரை அவ்வளவு எளிதாக நெருங்கிவிட முடியாது, படம் பண்ணலாம் என்று பேசி 11 வருடங்கள் கழித்துதான் அது சாத்தியமானது என தெரிவித்துள்ளார்.