உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்; ஜியோ போடும் மாஸ்டர் ப்ளான்: புகைப்படம் உள்ளே...

ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (13:54 IST)
உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை குவால்கம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனை கையகப்படுத்தும் முயற்சியில் ஜியோ ஈடுபட்டுள்ளது. 


 

 
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ சேவை, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இலவசமாய் துவங்கிய சேவை தற்போது கட்டண நிர்ணயத்துடனும் நல்ல செயல்முறையில் உள்ளது.
 
ஜியோ நிறுவனம் விரைவில் 5ஜி நெட்வொர்க்கை அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் ஜியோ நிறுவனம் மட்டும்தான் ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் கொண்டுள்ளது.
 
எனவே, ஜியோவால் 4ஜி-ல் இருந்து 5ஜி-க்கு எளிதாக மாறிவிட முடியும். தற்போது குவால்கம் நிறுவனம் 5ஜி சேவையை சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போனினை தயாரித்துள்ளது. இதன் புகைப்படம் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அனைத்து தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் 5ஜி சேவையை பெற முயற்சி எடுக்கும் நிலையில், ஜியோ  இதனி முதலில் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்