மீண்டும் தெலுங்குப் படத்தை தொடங்கிய ஷங்கர்… கிடப்பில் இந்தியன் 2!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (09:44 IST)
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் ராம்சரண் படம் என இருப் படங்கள் தொடங்கப்பட்டு பாதியில் நிற்கின்றன.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இந்நிலையில் இந்த படத்துக்கு ஒரு பிரேக் விட்டுவிட்டு ஷங்கர் இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் ராம்சரண் படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பை பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி இந்த மாத இறுதி வரை நடத்த உள்ளாராம். அதனால் இப்போதைக்கு இந்தியன் 2 படத்தைத் தொடங்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்