தனது ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முனைப்பில் ஷங்கர்… பாலிவுட் ஹீரோவோடு பேச்சுவார்த்தை!

vinoth

செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (07:47 IST)
தமிழ் சினிமாவின் வியாபார எல்லையை விரிவாக்கியதில் இயக்குனர் ஷங்கருக்கு முக்கியப் பங்குண்டு. அவர் இயக்கிய ஜெண்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன், எந்திரன் ஆகிய படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

இதில் அவர் தன்னுடைய முதல்வன் திரைப்படத்தை இந்தியில் நாயக் என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால் தமிழில் பெற்ற அளவுக்கு இந்தியில் வெற்றியை அந்த படம் பெறவில்லை. ஆனாலும் அந்த பட நாயகன் அனில் கபூருக்கு ஒரு முக்கியமான படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு நாயக் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முனைப்பில் இருக்கிறாராம் ஷங்கர். இதற்காக சமீபத்தில் அனில் கபூரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்