இயக்குனர் ஷங்கர் மகளுக்கு திருமணமா?

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (08:14 IST)
பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகளுக்கு திருமணம் என்று செய்திகள் வெளிவந்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஜெண்டில்மேன் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமாகி ’2.0’ வரை பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ஷங்கர். இவருக்கு அதிதி சங்கர் மற்றும் ஐஸ்வர்யா சங்கர் ஆகிய 2 மகள்களும் அர்ஜித் என்ற ஒரு மகனும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் ஷங்கரின் மூத்த மகள் அதிதி ஷங்கருக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்துவிட்டதாகவும், திருமண வேலைகள் பிசியாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
திருமண தேதி மற்றும் மாப்பிள்ளை குறித்த விபரங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஷங்கரின் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் என தெரிகிறது 
 
இந்த நிலையில் ‘இந்தியன் 2’ என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்த ஷங்கர், அந்த படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டதால் 3 பிரபல நடிகர்களை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்